ரூ.52,000 கோடி கார்கள் தேக்கம் டீலர்களிடம் நிற்கும் 4.40 லட்சம் கார்கள்
ரூ.52,000 கோடி கார்கள் தேக்கம் டீலர்களிடம் நிற்கும் 4.40 லட்சம் கார்கள்
ADDED : ஜூன் 13, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாடு முழுதும் உள்ள பயணியர் கார் முகவர்கள், 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை இருப்பில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 4.4 லட்சம் கார்கள் டீலர்களிடம் இருப்பில் இருக்கின்றன.
வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தகவலின்படி, பயணியர் கார் கையிருப்பு, 52 முதல் 63 நாட்களாக உள்ளது. இது சராசரியாக இருக்க வேண்டிய 21 நாட்களை விட மிக அதிகம். இதனால், பயணியர் கார் முகவர்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்படுகின்றனர்.
வருமான வரி, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், நடப்பாண்டின் இரண்டாம் பாதியில், கார் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.