வருமான வரி சட்டத்திருத்தம் 6,500 பரிந்துரைகள் குவிந்தன
வருமான வரி சட்டத்திருத்தம் 6,500 பரிந்துரைகள் குவிந்தன
ADDED : நவ 06, 2024 01:24 AM

வருமான வரி சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக, 6,500 பரிந்துரைகள் வந்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வருமான வரி சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என, மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த அக்டோபரில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் நிதியமைச்சர் தலைமையில், மறு ஆய்வு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டத்தின் பல்வேறு அம்சங்களை மறு ஆய்வு செய்ய 22 சிறப்பு துணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணை குழுவினர், பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, வருமான வரி சட்டத்தை மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை வழங்குவர் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.