ADDED : அக் 12, 2025 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த 2024--25ம் சந்தைப்படுத்தல் ஆண்டில், 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, அகில இந்திய சர்க்கரை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது அக்டோபரில் துவங்கி, செப்டம்பரில் முடிவடையும். கடந்த 2024--25ம் ஆண்டில், 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, நடப்பு பருவத்துக்கான சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீடை, முன்னரே அறிவிக்க வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.