ADDED : அக் 12, 2025 10:50 PM

புதுடில்லி:செயற்கை நுாலிழை ஆடை தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளியில் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில், மத்திய ஜவுளி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த தயாரிப்புகள் பட்டியலில், எட்டு புதிய செயற்கை நுாலிழை ஆடை சார்ந்த எச்.எஸ்.என்., குறியீடுகளும்; ஒன்பது புதிய செயற்கை துணிகள் சார்ந்த எச்.எஸ்.என்., குறியீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், ஆக., 1 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு தேவையான குறைந்தபட்ச முதலீடு, பகுதி 1 எனில், 300 கோடி ரூபாயில் இருந்து 150 கோடி ரூபாயாகவும்; பகுதி 2 எனில், 100 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாகவும், பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 25 சதவீதத்துக்கு பதிலாக, 10 சதவீதம் விற்பனையை எட்டியிருந்தால், ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.