ADDED : அக் 17, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நம்நாட்டில் 85 சதவீத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் யு.பி.ஐ., வாயிலாக நடைபெறுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆதார், யு.பி.ஐ., ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் புதுமை கண்டு பிடிப்பை அதிகரித்திருக்கின்றன. பயனாளிகளுக்கு அரசு திட்டங்களின் பயன் நேரடியாகவும் குறைந்த செலவிலும் இவை கிடைக்கச் செய்து உள்ளன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த உருவத்தை யு.பி.ஐ., மாற்றியுள்ளது. உடனுக்குடன், குறைந்த செலவில், திறமையான, துல்லியமான, பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையை உறுதி செய்திருக்கிறது.
இவ்வாறு தெரிவித்தார்.