தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘ஸ்பேம்’ அழைப்புகள் அனுப்பிய போன் இணைப்புகள் மீது நடவடிக்கை

‘ஸ்பேம்’ அழைப்புகள் அனுப்பிய போன் இணைப்புகள் மீது நடவடிக்கை

‘ஸ்பேம்’ அழைப்புகள் அனுப்பிய போன் இணைப்புகள் மீது நடவடிக்கை


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘ஸ்பேம்’ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், விதிமுறைகளை மீறிய 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புகள் மீது டிராய் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஜூலை – செப்., மாத காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்முறை விதிகளை மீறிய 1,10,325 இணைப்புகளின் ‘அவுட்கோயிங்’ சேவைகள் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விதிகளை மீறிய 13,777 இணைப்புகள் ஓராண்டுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், விதிமுறைகளை மீறிய 374 நிறுவனங்கள் ஓராண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இக்காலாண்டில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தொடர்பாக 15.29 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வாயிலாக 1,990 கோடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்பேம் என கண்டறிந்துள்ளன.

சந்தேகத்திற்குள்ளான 34,025 அனுப்புனர்களுக்கு இ–கே.ஒய்.சி., மேற்கொள்ளப்பட்டு இதில், தோல்வியடைந்த 9,977 அனுப்புனர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us