ADDED : ஜூன் 03, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ஈரான் நாட்டு சரக்கு கப்பல் எதையும் கையாளவில்லை, அது தொடர்பாக அமெரிக்க விசாரணை குறித்தும் அறிந்திருக்கவில்லை என, அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான வர்த்தக தடையை மீறும் வகையில், அந்நாட்டில் இருந்து எல்.பி.ஜி.,யை குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வாயிலாக, இந்தியாவுக்கு அதானி குழுமம் இறக்குமதி செய்ததா என, அமெரிக்கா விசாரிப்பதாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
அதற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், கொள்கை அளவில், ஈரானில் இருந்து சரக்கு எதையும் தங்கள் குழுமம் கையாளவில்லை எனத் தெரிவித்துள்ளது.