ADDED : மே 11, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:இந்தியாவில் ஹைட்ரஜன் பேட்டரியில் இயங்கும் முதல் சரக்கு வாகனத்தை, அதானி குழுமம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கார்பன் வெளியீட்டை குறைப்பதுடன், தூய்மை போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் பேட்டரியில் இயங்கும் சரக்கு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி சுரங்கப் பணியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த வாகனத்தில், நவீன தொழில்நுட்பத்துடன், 3 ஹைட்ரஜன் டேங்குகள் இடம்பெற்றுள்ளன.
இதன் வாயிலாக 40 டன்கள் வரையிலான சரக்குகளை, 200 கி.மீ., வரை எடுத்துச் செல்ல முடியும் என அதானி குழுமம் தெரிவித்துஉள்ளது.