ADDED : ஜூன் 09, 2025 12:53 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், கவுதம் அதானி பெற்ற மொத்த ஊதியம் 10.41 கோடி ரூபாய் என, சமீபத்தில் வெளியிடப்பட்ட அக்குழுமத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பணக்காரரும், முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானி, 62, பட்டியலிடப்பட்ட ஒன்பது நிறுவனங்களில், இரண்டில் இருந்து கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் பெற்ற மொத்த ஊதியம் 10.41 கோடி ரூபாய் என அக்குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 2.54 கோடி ரூபாயும், துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து 7.87 கோடி ரூபாயும் ஊதியமாக பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டில் அவர் பெற்ற மொத்த ஊதியமான 9.26 கோடி ரூபாயை விட 12 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.
அதானியின் இந்த ஊதியம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில்துறை சகாக்கள் மற்றும் அவரது குழுமத்தின் முக்கிய நிர்வாகிகளின் ஊதியத்தைவிட குறைவாகும்.