உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 10:47 PM

அ நிறம் | அளவு
சென்னை: ராணுவ அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் 16வது ‘ஏரோ இந்தியா’ விமான மற்றும் பாதுகாப்பு துறை கண்காட்சி, அடுத்தாண்டு பிப்., 8ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை பெங்களூரில் நடக்க உள்ளது.
ஐந்து நாட்கள் நடக்க உள்ள இந்த சர்வதேச கண்காட்சியில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன பாதுகாப்பு தளவாடங்கள் பங்கேற்கின்றன. உள்நாட்டு பாதுகாப்பு துறை நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்–அப்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண் காட்சியில் பங்கேற்க விரும்புவோர் மற்றும் பார்வையாளர்கள் aeroindia.gov.in என்ற இணையதளம் வாயிலா க பதிவு செய்து கொள்ளலாம்.
