UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 10:47 PM

இந்திய பிளம்பிங் சங்கம் சார்பில், 32-வது இந்திய பிளம்பிங் கருத்தரங்கு, சென்னையில் நடைபெற உள்ளது. நீர், பிளம்பிங் மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள சவால்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளன.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
கட்டுமான துறை வல்லுநர்கள்
பிளம்பிங் மற்றும் நீர் மேலாண்மைத் துறை நிபுணர்கள்
பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள்
தொழில்துறையினர் மற்றும் தொழில்முனைவோர்
கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள்
நீர் மற்றும் சுகாதார துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள்.
என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம்?
விடுதிகள், மருத்துவமனைகளில் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளின் செயல்பாடு, பராமரிப்பு
விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலை யங்கள், தொழிற்சாலைகளில் பிளம்பிங் அமைப்புகளை வடிவமைத்தல் மற்றும் நிறுவுதல
நீர் மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு
பிளம்பிங் அமைப்புகளின் தடுப்பு மற்றும் முன்கணிப்பு பராமரிப்பு
ஸ்மார்ட் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன தீர்வுகள்
பிளம்பிங் துறையில் தொழில்நுட்ப கண்டு பிடிப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகள்.
