உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 05, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: சூரிய மின்சக்தி துறையில் முதலீடு, தொழில்நுட்ப பகிர்வு மற்றும் பயிற்சி உள்ளிட்ட ஒத்துழைப்புகளை பெற இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆப்ரிக்க நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக ஜிம்பாப்வே நாட்டின் எரிசக்தி அமைச்சர் ஜூலை மோயோ தெ ரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேயில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை, 2030ம் ஆண்டுக்குள் 49 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியாவுடன் ஒருங்கிணைந்து நீர்மின்சக்தி மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகரிக்கப்படும். இந்தியாவிடம் சூரிய மின்சக்தி உற்பத்தி யில் மேம்பட்ட தொழில்நுட்ப திறன் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
