உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 05, 2026 02:36 AM

அ நிறம் | அளவு
நெல் (அட்சயா)
கடந்த வாரம் : ரூ.38.00
தற்போது : ரூ.40.00
வரத்து குறைந்து வருவதால் அனைத்து வகையான நெல் ரகங்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அட்சயா நெல் ரகத்தின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
திருமங்கலம், மதுரை.
சிவப்பு அவல்
கடந்த வாரம் : ரூ.90.00
தற்போது : ரூ.100.00
அவல் உற்பத்தி சீராக உள்ளது. தரத்தை பொறுத்து வெள்ளை அவல் 40 - 80 ரூபாய் வரையும் சிவப்பு அவல் 60 -100 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதே விலை தொடரும்.
சந்தை
திருமங்கலம், மதுரை.
சம்பங்கிப்பூ
கடந்த வாரம் : ரூ.80.00
தற்போது: ரூ.50.00
வரத்து சீராக உள்ளது. விசேஷ நாட்களில் விலை உயர்கிறது. மற்ற நாட்களில் விலைகுறைகிறது. ஆவணி மாதம் வரை இந்த நிலை தொடரும். அதன்பின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
சத்தியமங்கலம், ஈரோடு.
