ADDED : மே 10, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'டிக்ஸன் டெக்னாலஜிஸ்' நிறுவனம், பிரபல 'அல்காடெல்' ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க, 'நெக்ஸ்ட்செல்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
'பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், அல்காடெல் பிராண்டு ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க, 'நெக்ட்செல் இந்தியா'வுடன் கைகோர்த்துள்ளது.
டிக்ஸன் டெக்னாலஜிஸ், இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வடிவமைப்பு சார்ந்த மின்னணு உற்பத்தி நிறுவனமாகும். இது நுகர்வோர் பொருட்கள், விளக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.