அனில் அம்பானி மோசடிதாரர் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு
அனில் அம்பானி மோசடிதாரர் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு
ADDED : ஆக 25, 2025 12:34 AM

புதுடில்லி:அனில் அம்பானி மோசடிதாரர் என பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை மோசடியாளர் என, மற்றொரு பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அமைப்புகள், அனில் அம்பானி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தின.
இந்நிலையில், கடன் ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டதாக கூறி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானியின் கடன் கணக்குகளை மோசடி கணக்குகள் என, பேங்க் ஆப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது.
நி றுவனத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தவும், மூலதன செலவினங்களுக்காகவும் 724.78 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டதாகவும், இதில் பாதி தொகையை ஒரு பிக்சட் டிபாசிட் கணக்கில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2 017ம் ஆண்டிலேயே இந்த கடன் கணக்கு வாராக் கடனாக வகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், இது பலன் அ ளிக்கவில்லை என, பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, எஸ்.பி.ஐ., கடன் மோசடி வழக்கில் தன் மீது திட்டமிட்டு தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்படுவதாகவும்; தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அனில் அம்பானி தெரிவித்துள் ளார்.