ADDED : அக் 29, 2025 03:02 AM

புதுடில்லி: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், யெஸ் பேங்க் இடையிலான நிதி பரிவர்த்தனைகள் குறித்த சி.பி.ஐ., விசாரணையில்,ஷெல் கம்பெனி எனப்படும் போலி நிறுவனங்கள் வாயிலாக நிதி திசை திருப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி, யெஸ் பேங்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரானா கபூர் மற்றும் அனில் அம்பானி ஆகியோரை உள்ளடக்கிய குற்றச்சதியின் ஒரு பகுதி என சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஜூன் மாதம் முதல் 2019 பிப்ரவரி மாதம் வரை ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட வணிக பத்திரங்களில் யெஸ் பேங்க் 1,965 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், இதில் 360 கோடி ரூபாய் குறித்து சந்தேகம் எழுத்துள்ளதாகவும் சி.பி.ஐ., தெரிவித்து உள்ளது.
சி.பி.ஐ., விசாரணை ஒருபுறமிருக்க அமலாக்கத் துறையும் இந்த விவகாரம் குறித்து தனியாக விசாரித்து வருகிறது.
அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு யெஸ் பேங்க் வழங்கிய 12,800 கோடி ரூபாய் கடன் குறித்து ஈ.டி., விசாரணை கடந்த 2020 முதல் நடக்கிறது

