'ஏர்பாட்ஸ்' உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்
'ஏர்பாட்ஸ்' உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்
ADDED : அக் 27, 2025 01:34 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள 'ஆப்பிள் ஏர்பாட்ஸ்' தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்த, 'பாக்ஸ் கான்' நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ஐபோன்' ஒப்பந்த தயாரிப்பாளரான பாக்ஸ்கானின் துணை நிறுவனமான 'பாக்ஸ்கான் இன்டர்கனெக்ட் டெக்னாலஜி'க்கு சொந்தமான ஏர்பாட்ஸ் தயாரிப்பு ஆலை ஹைதராபாதில் உள்ளது.
அங்கு அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் உற்பத்தி மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
தற்போது அங்கு 2,000 பேர் பணியாற்றி வரும் நிலையில், எண்ணிக்கையை 5,000 ஆக அதிகரிக்கவும், ஏர்பாட்ஸ் உற்பத்தியை ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, வியட்நாமில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.
மொத்தம் 4,800 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், 3,000 கோடி ரூபாய் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

