'மின் வாகனங்களை சாராமல் மாற்று எரிபொருள் ஊக்குவிப்பு'
'மின் வாகனங்களை சாராமல் மாற்று எரிபொருள் ஊக்குவிப்பு'
ADDED : அக் 27, 2025 01:30 AM

புதுடில்லி: மின்சார வாகனங்களை மட்டுமே ஊக்குவிக்காமல், நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கேற்ப மாற்று எரிபொருள் வாகனங்களை ஊக்குவிப்பதாக, இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
'இந்தியாவில் வாகன மின்மயமாக்கல்' என்ற அறிக்கையை இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், மின் வாகனங்களை மட்டும் சாராமல், சி.என்.ஜி., ஹைபிரிட், எத்தனால் கலப்பு மற்றும் ஹைட்ரஜன் என்ற பசுமை வாகனங்களிலும் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வாகன துறையில் நான்காவது பெரிய நாடாக உள்ள இந்தியா, 'பல எரிபொருள், பல பாதைகள்' என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது. அதாவது, மின்சார வாகனங்களை மட்டுமே ஊக்குவிக்காமல், நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கேற்ப மாற்று எரிபொருள் வாகனங்களை ஊக்குவிக்கிறது.
நாட்டின் மொத்த மின்சார வாகன விற்பனையில், தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் 50 சதவீத பங்கு வைத்துள்ளன. பசுமை எரிவாயு பயன்பாட்டில், இந்தியா உலகின் முன்னோடியாக திகழ இலக்கு வைத்துள்ளது. அதுவும், ஒரு எரிபொருளை மட்டுமே சாராமல், அனைத்து பசுமை எரிபொருட்களுக்கும் ஆதரவான கொள்கைகளை பின்பற்றுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

