UPDATED : ஜன 24, 2026 06:49 AM
ADDED : ஜன 24, 2026 02:26 AM

புதுடில்லி: இந்தியாவின் எரிசக்தி மாற்றம் தொடர்பான வாகன எரிபொருள் ஆய்வில், 'ஆட்டோ' எல்.பி.ஜி.,யையும் சேர்க்க வேண்டும் என, இந்தியன் ஆட்டோ எல்.பி.ஜி., கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் 'பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்' கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உதவும் எரிபொருள்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. 'டெரி' எனும் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
![]() |
வரும் ஆண்டுகளில், நாட்டின் வாகன எரிபொருள் தொடர்பான கொள்கை முடிவுகளில், இந்த ஆய்வு முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் இந்த ஆய்வில், ஆட்டோ எல்.பி.ஜி., விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது உடனடியாக பயன்படுத்தக்கூடிய மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கவல்ல எரிபொருள் என்பதால், இதையும் ஆய்வில் சேர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


