ADDED : அக் 30, 2025 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையைச் சேர்ந்த கண் மருத்துவமனையான ஐ பவுண்டேஷனில், பெல்ஜியத்தைச் சேர்ந்த வெர்ல்இன்வெஸ்ட் நிறுவனம் 660 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
தென் மாநிலங்களில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 25 மருத்துவமனைகளை, 'ஐ பவுண்டேஷன்' கொண்டுள்ளது.
இதில், பெல்ஜியத்தின் வெர்ல்இன்வெஸ்ட் நிறுவனம் 7.50 கோடி அமெரிக்க டாலர், அதாவது 660 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
ஐ பவுண்டேஷனின் நெட்வொர்க்கை மேலும் வலிமையூட்டும் வகையிலும், இந்தியா முழுக்க விரிவுபடுத்துவதற்கும் இம்முதலீடு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெர்ல்இன்ஸ்வெஸ்ட் நிறுவனம் தன் இணையதளத்தில் இத்தகவலை உறுதி செய்துள்ளது.

