ADDED : ஏப் 02, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:பொதுத் துறை நிறுவனமான 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு வருவாய், இதுவரை காணாத அளவில் 23,000 கோடி ரூபாயை அடைந்து, புதிய மைல்கல்லை எட்டிஉள்ளது. அதாவது, 2024 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 2025 நிதியாண்டு வருவாய் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், 905 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை, 2024 நிதியாண்டை விட 14 சதவீதம் அதிகம்.
கடந்த நிதியாண்டில் மட்டும், 18,715 கோடி ரூபாய்க்கு ஆர்டர்களை பெற்றுள்ளது இந்நிறுவனம். 2025 ஏப்., 1 நிலவரப்படி நிறு வனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு 71,650 கோடி ரூபாயாக உள்ளது.

