பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 'டாப் 10' மாநிலங்களில் பீஹார்
பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 'டாப் 10' மாநிலங்களில் பீஹார்
ADDED : ஆக 03, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டிலேயே மிகக் குறைந்த தனி நபர் வருமானம் கொண்ட மாநிலமான பீஹாரில், பங்குச் சந்தை முதலீட்டின் மீதான ஆர்வம் எதிர்பாராத வளர்ச்சியை கண்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், பீஹாரில் பங்குச் சந்தை முதலீடு மேற்கொள்பவர்களின் எண் ணிக்கை 679 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக சற்று முன்னேறிய நிலையில் உள்ள மாநிலங்களின் முதலீட்டாளர் எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.