ADDED : ஆக 03, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் மின்சார கார்கள் விற்பனை மையத்தை, 'வின்பாஸ்ட் ஆட்டோ இந்தியா' திறந்துள்ளது.
இந்நிறுவனம், துாத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார கார்கள் உற்பத்தியை நாளை முதல் துவக்குகிறது. கடந்த ஜூலை 15 முதல் தன் விஎப் 6, விஎப் 7 மாடல் கார்களுக்கான முன்பதிவை இந்நிறுவனம் துவக்கியது.
முதல் விற்பனை மையத்தை குஜராத்தின் சூரத் நகரில் துவக்கிய வின்பாஸ்ட், இரண்டாவது விற்பனை மையத்தை சென்னையில் துவங்கி உள்ளது. மேலும், இந்தாண்டு இறுதிக்குள், நாடு முழுதும் 27 நகரங்களில், 35 விற்-பனை முகவர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.