ADDED : நவ 08, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியாவின் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இறக்குமதிக்கு, பிரேசில் முக்கிய ஆதாரமாக மாற வாய்ப்புள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உளுத்தம் பருப்பின் அளவு கடந்த 2023ல் 4,102 டன்னில் இருந்து, நடப்பு ஆண்டின் அக்டோபர் இறுதி வரை 22,000 டன்னாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து துவரை மற்றும் கருப்பு உளுந்துக்கான முக்கிய இறக்குமதி ஆதாரமாக, மாறும் திறனை பிரேசில் பெற்று உள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
2023ல் பிரேசிலில் இருந்து இறக்குமதியான உளுத்தம் பருப்பு 4,102 டன். நடப்பு ஆண்டின் அக்டோபர் இறுதியில் இது 22,000 டன்னாக அதிகரித்துள்ளது