ADDED : நவ 08, 2025 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரிட்டானியா நிறுவனம், புரோட்டின் பான வணிகத்தில் நுழைகிறது. இத்தகவலை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி தெரிவித்தார்.
ஏற்கெனவே, அமுல், அக்ஷய கல்பா ஆர்கானிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள், இவ்வகை பானங்களை விற்பனை செய்கின்றன.
லஸ்ஸி, மோர் உள்ளிட்ட புரோட்டின் பானங்களை அவை தயாரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், பிரிட்டானியாவும் புரோட்டின் பான தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதன் காரணமாக, புரோட்டின் பானத்துக்கு வரவேற்பு உள்ளதாகவும், அதன் விற்பனை சந்தையில் பிரிட்டானியாவும் கணிசமான பங்கை பெறும் என்றும் வருண் பெர்ரி நம்பிக்கை தெரிவித்தார்.

