17 ஆண்டுகளில் முதல்முறையாக லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல்.,
17 ஆண்டுகளில் முதல்முறையாக லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல்.,
ADDED : பிப் 16, 2025 01:53 AM

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 17 ஆண்டுகளில், முதன்முறையாக, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 262 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில், 1,569 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில், நடப்பாண்டு 1,800 கோடி ரூபாய் அளவுக்கு நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.
முந்தைய ஜூலை - செப்டம்பர் காலாண்டில், 1,243 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, அக்டோபர் -- டிசம்பர் காலாண்டில் மொபைல் இணைப்பு, வீடுகளுக்கான இணைய இணைப்புகள் வாயிலாக கிடைக்கும் வருமானம் அதிகரித்ததோடு, நிதிச்செலவுகள் உள்பட ஒட்டுமொத்த செலவினங்களை குறைத்து உள்ளது.
மத்திய அரசு, தொடர்ச்சியாக பல்வேறு புத்துயிர் திட்டங்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கட்டணத்தை ரொக்கமாக செலுத்துவதில் இருந்து விலக்கு மற்றும் மூலதன உள்ளீடுகளை அளித்து வந்ததன் பலனாக, 17 ஆண்டுகளுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல்., லாபப் பாதைக்கு மீண்டும் திரும்பி
உள்ளது.

