சென்னை 'ஸ்டார்ட் அப்' ரூ.6.50 கோடி நிதி திரட்டியது
சென்னை 'ஸ்டார்ட் அப்' ரூ.6.50 கோடி நிதி திரட்டியது
ADDED : ஜூலை 25, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில் நிறுவப்பட்ட, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, பிளெனோம்டெக் நிறுவனம், ஓவிங்கடன் கேபிடல் பார்டன்ஸ், ஐக்கிய அரபு நாடுகளின் ஏ.ஏ.டி.ஐ., மூத்த முதலீட்டாளர் மணிஷ் காந்தி ஆகியோரிடம் இருந்து, 6.50 கோடி ரூபாய் நிதியை திரட்டிஉள்ளது.
பிளெனோம்டெக் நிறுவனம், மருத்துவமனை மேலாண்மையில் பாதுகாப்பு, சுகாதார கண்டுபிடிப்புகளை மையமாக உடைய அதி நவீன, 'பிளாக்செயின்' அடிப்படையிலான தரவு மேலாண்மை தீர்வுகளை வழங்குகிறது.
பல் மருத்துவத்தில் தற்போது சோதனைகளுக்கு உட்பட்டுள்ள, அதன் ஏ.ஐ., உடன் இயங்கும், 'சாஸ்' தளத்துடன் மின்னணு சுகாதார பதிவுகள் எவ்வாறு கைப்பற்றப்படுகின்றன, பராமரிக்கப்படுகின்றன, பகுப்பாய்வு செய்யப்படுகின்றன என்பதை மாற்ற தயாராக உள்ளது.