ரோல்ஸ் ராய்ஸ் அதிகாரிகளுடன் பிரிட்டனில் முதல்வர் ஆலோசனை
ரோல்ஸ் ராய்ஸ் அதிகாரிகளுடன் பிரிட்டனில் முதல்வர் ஆலோசனை
ADDED : செப் 04, 2025 01:37 AM

சென்னை:தொழில் முதலீடுகளை ஈர்க்க, பிரிட்டனில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதலில் ஜெர்மனி சென்ற முதல்வர், அங்கு தமிழக தொழிற்துறையினர் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். முதல்வரின் ஜெர்மனி பயணத்தில், 7,020 கோடி ரூபாய் முதலீடு தொடர்பான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைதொடர்ந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் முதல்வர் முகாமிட்டுள்ளார். அங்கு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார்.
ஓசூரில் அந்நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் இயங்கும் ஐ.ஏ.எம்.பி.எல்., நிறுவனத்தின் விரி வாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட து.
நிறுவனங்கள் ஒப்பந்தம் வில்சன் பவர் அன்ட் டிஸ்ட்ரிபியூஷன் - ரூ.300 கோடி முதலீடு பிரிட்டானியா கார்மென்ட் பேக்கேஜிங் - ரூ.520 கோடி முதலீடு லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸ், எக்கோல் இன்டியூட் லேப், எக்ஸிடெர் பல்கலைக்கழகம் ஆகியவையும் ஒப்பந்தம்.