UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 10:40 PM

புதுடில்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்களின் விலையை விட, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பேட்டரி செல்களின் விலை 20 சதவீதம் அதிகமாக இருப்பதால், நம் நாட்டின் பேட்டரி செல் இறக்குமதி தொடர்ந்து அதிகரிக்கிறது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக தரவுகளின்படி, பேட்டரி செல்கள் இறக்குமதியின் மதிப்பு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 94 சதவீதம் அதிகரித்து, 15,721 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த நிதியாண்டில், இதன் மொத்த மதிப்பு 64 சதவீதம் உயர்ந்து, 41,667 கோடி ரூபாயாக உள்ளது. பேட்டரி செல் இறக்குமதியில், சீனாவின் பங்கு மட்டும் 85 சதவீதமாக உள்ளது. இங்கு இறக்குமதியாகும், பேட்டரி செல் மூலப்பொருட்களில் 90 சதவீதம் அங்கு சுத்திகரிக்கப்படுகின்றன.
பெரும்பாலான இந்திய உற்பத்தி ஆலைகள், பேட்டரி செல் தயாரிப்பில் ஈடுபடாமல், பேட்டரி பேக் அசெம்பிள் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
