கட்டுமான இயந்திரங்கள் உற்பத்தி சி.என்.ஹெச்., – கொபெல்கோ கூட்டணி
கட்டுமான இயந்திரங்கள் உற்பத்தி சி.என்.ஹெச்., – கொபெல்கோ கூட்டணி
UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 10:40 PM

புதுடில்லி: பிரிட் டனின் சி.என்.ஹெச்., எனும் ‘கேஸ் நியூ ஹாலண்டு இன்டஸ்ட்ரியல்’ மற்றும் ஜப்பானின் ‘கொபெல்கோ’ நிறுவனங்கள், கட்டுமான இயந்திரங்களை கூட்டாக உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந் தத்தின் படி, சி.என்.ஹெச்., நிறுவன கட்டுமான இயந்திரங்கள் பிரிவின், 70 சதவீத பங்குகளை, 9,393 கோடி ரூபாய்க்கு கொபெல்கோ கையகப்படுத்துகிறது.
இந்நிறுவனத்தின் விவசாய பிரிவில் வரும் கேஸ் ஐ.ஹெச்., நியூ ஹாலண்ட் மற்றும் ஸ்டெயர் பிராண்டுகள், இந்நிறுவனத்தின் கீழேயே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.என்.ஹெச்., நிறுவனத்திற்கு மத்திய பிரதேசத்திலும், கொபெல்கோவுக்கு ஆந்திராவிலும் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இந்திய கட்டுமான இயந்திர உற்பத்திக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
