ADDED : டிச 09, 2025 01:29 AM

சென்னை: சிட்டி யூனியன் வங்கியும், 'சேலரி சீ' நிறுவனமும் இணைந்து, 'லெவல் அப் கிரெடிட் கார்டு' என்ற திட்டத்தை, சென்னையில் நேற்று அறிமுகம் செய்தன.
நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த் கூறுகையில், “மாத ஊதியதாரர்களுக்கு பாதுகாப்பான கடன் வசதி வழங்கும் வகையில், அறிமுகப்படுத்தப் பட்டுள்ள லெவல் அப் கிரெடிட் கார்டில் பிற நிறுவனங்களைவிட அதிக சலுகைகள் கிடைக்கும்,” என்றார்.
'சேலரி சீ' நிறுவன இணை நிறுவனர் மோகித் கோரிசரியா கூறுகையில், “யு.பி.ஐ.,யுடன் இந்த கார்டு இணைந்திருப்பதால், 37.50 சதவீதம் வரை ரிவார்டு புள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். அன்றாட யு.பி.ஐ., பரிவர்த்தனைகள், ஆன்லைன் ஷாப்பிங், மாத தவணைகள் செலுத்த முடியும். கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட செலவுகளுக்கு மட்டும் சலுகை கிடைக்கும்,” என்றார்.

