
தங்கம், வெள்ளி
அபாயங்கள் ஆதரவாக இருக்கும்எல்லா மாதமும் முதல் வெள்ளி அன்று வெளியாகும் அமெரிக்க நாட்டின் புதிய தொழிலாளர்கள் சேர்க்கை எண்ணிக்கை, எதிர்பார்த்ததை விட குறைவாகவும்; மேலும் வேலையில்லாதவர் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததன் விளைவாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது. 4.32 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், 4.3% என்ற கணிப்பை ஒத்திருந்தது, ஆனால், ஜூலை மாதத்தில் பதிவான 4.25% வேலையின்மை விகிதத்திலிருந்து அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் 2021க்கு பின், மிக உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.
இது, வரும் செப்டம்பர் 17ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை அடைந்தது. உலக பொருளாதார மற்றும் அரசியல் அபாயங்கள் தங்கம், வெள்ளி இரண்டிற்கும் நீண்டகால ஆதரவாக இருக்கும்.
கச்சா எண்ணெய்விலை சரிவு தொடரும்
கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் பீப்பாய் ஒன்றுக்கு 5 டாலர் குறைந்து, 61 டாலர் என்ற நிலையில் வர்த்தகம் முடிவுற்றது. கடந்த மூன்று வாரங்களாகவே விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், விலையின் தாக்கத்திற்கு காரணமாக அமைந்தது.
முதலீட்டாளர்கள், மத்திய வங்கியின் செப்டம்பர் கூட்டத்தை தற்போது 4.25% முதல் 4.5% வரையிலானகூட்டாட்சி நிதிகளின் வட்டி விகித இலக்கு வரம்பில்,கால் சதவீத புள்ளி குறைப்புக்கான ஒரு முடிவாககருதுகின்றனர்.பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் எட்டு உறுப்பினர்களும், ஓபெக் பிளஸ் அமைப்பில் உள்ள ரஷ்யா போன்ற நட்பு நாடுகளும் அக்டோபரில் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கும்.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானித்தன் விளைவாகவும், தேவை குறையும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் விலை குறைய காரணமாக அமைந்தது.