தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : செப் 24, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாருதி சுசூகி ஆலையில் 'கிரீன் ஹைட்ரஜன்' அமைப்பு



மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஹரியானாவின் மானேசர் ஆலை வளாகத்தில் 300 கிலோவாட் திறன் கொண்ட 'கிரீன் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்' ஆலையை அமைத்துள்ளது. சூரிய மின்சாரத்தை கொண்டு பசுமை ஹைட்ரஜன் தயாரித்து, அதை இயற்கை எரிவாயுவுடன் கலந்து உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்த திட்டம் உதவுகிறது. விடுமுறை நாட்களில் உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து ஹைட்ரஜன் தயாரிக்க இது பயன்படும்.

டி.எஸ்.பி., டிசைன் நிறுவனத்தின் 51% பங்குகள் அனராக் வாங்கியது



ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான அனராக், டி.எஸ்.பி., டிசைன் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. வடிவமைப்பு துறையில் டி.எஸ்.பி., நிறுவனம் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டது. மும்பை, பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களில் கிளைகளை கொண்டுள்ள டி.எஸ்.பி., 1,000க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்துள்ளது.

எஸ்கார்ட்ஸ் குபோடா பங்குகள் எச்.டி.எப்.சி., எம்.எப்., விற்பனை



வேளாண் மற்றும் இஞ்சினியரிங் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் 1.45 சதவீத பங்குகளை, எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் 453 கோடி ரூபாய்க்கு பங்குச்சந்தையில் விற்பனை செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் நடந்த 'பல்க் டீல்' வாயிலாக எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் 16.21 லட்சம் பங்குகள், பங்கு ஒன்றுக்கு சராசரியாக 2,794 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக எச்.டி.எப்.சி., பரஸ்பர நிதியின் பங்கு மூலதனம் 6.94 சதவீதத்திலிருந்து 5.49 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில், நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி நிறுவனம் இப்பங்குகளை வாங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us