தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வர்த்தக ஒப்பந்த சலுகை பெறுவதற்கு திருப்பூரில் வழிகாட்டி கருத்தரங்கு

 வர்த்தக ஒப்பந்த சலுகை பெறுவதற்கு திருப்பூரில் வழிகாட்டி கருத்தரங்கு

 வர்த்தக ஒப்பந்த சலுகை பெறுவதற்கு திருப்பூரில் வழிகாட்டி கருத்தரங்கு

1


ADDED : செப் 24, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:54 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தடையற்ற வர்த்தக ஒப்பந்த சலுகைகளை பயன்படுத்தி, எப்படியெல்லாம் பயனடையலாம் என்பதை விவரிக்கும் வகையில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) சார்பில் வழிகாட்டி கருத்தரங்கு திருப்பூரில் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, பிரிட்டன், நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய நாடுகள் உட்பட 38 நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனுடன் ஒப்பந்தம் அமலுக்கு வந்து விட்டது. நியூசிலாந்துடன் வரும் அக்., 20 முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. ஒப்பந்தம் வாயிலாக, உலக மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் வசிக்கும் நாடுகளுடன் வரிச்சலுகையுடன் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வர்த்தக ஒப்பந்த சலுகையை பயன்படுத்தி வர்த்தகம் செய்வது குறித்து, ஏ.இ.பி.சி., மூலமாக, 'கிளஸ்டர்' வாரியாக வழிகாட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தங்களால் முழுமையான வரி தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். முதலில், உற்பத்தி பொருட்களின் தோற்றம் குறித்து, நமது நாட்டின் அங்கீகார சான்றாக 'ஆர்ஜின்' என்ற சான்றிதழ் பெற வேண்டும். அதன்பின், வர்த்தகத்துறையின் வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு, சுங்கவரித்துறை என, பல்வேறு முன் ஆயத்த பணிகளை செய்ய வேண்டும். அப்போது தான், ஒப்பந்த சலுகைகளை பெற்று ஏற்றுமதி செய்ய முடியும்.

ஏற்றுமதியாளர்கள் பயனடையும் வகையில், 'கிளஸ்டர்' வாரியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் வழிகாட்டி கருத்தரங்கை நடத்தி வருகிறோம். விரைவில் சென்னையிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us