தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


UPDATED : நவ 18, 2026 02:11 AM

ADDED : நவ 18, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 02:11 AM ADDED : நவ 18, 2026 02:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வர்த்தக இணைப்பை விரிவுபடுத்தும் டிபி வேர்ல்டு

நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், டிபி வேர்ல்டு நிறுவனம், புதிய சரக்கு ரயில் மற்றும் கப்பல் சேவைகளை

அறிமுகப்படுத்தியுள்ளது. டில்லி உள்ளிட்ட பகுதிகளை குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துடன் இணைக்கும் பிரத்யேக சரக்கு ரயில் சேவையும்,

கேரளாவின் கொச்சி மற்றும் இலங்கையின் கொழும்பு இடையே வாரத்திற்கு இரண்டாவது கப்பல் சேவையும் தொடங்கப்பட்டுள்ளன.

அகர்வால் கண் மருத்துவமனை ஹெல்த்கேருடன் இணைப்பு

டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன், டாக்டர் அகர்வால்ஸ் ஐ ஹாஸ்பிடல் லிமிடெட் நிறுவனத்தை இணைக்கும் திட்டம், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான இணைப்பு திட்டத்திற்கு, சென்னை தேசிய நிறுவன சட்ட

தீர்ப்பாயத்தின் அமர்வு, கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஒப்புதல் அளித்து

உத்தரவிட்டது.

100 பயோகேஸ் ஆலைகள் ரிலையன்ஸ் அமைக்கிறது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 2030ம் ஆண்டுக்குள் நாடு முழுதும் சுமார் 100 உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகளை ரூ.15,000 கோடி முதலீட்டில்

அமைக்க திட்டமிட்டுள்ளது. விவசாய கழிவுகளை மூலப்பொருளாக

பயன்படுத்தி, தினமும் 50 லட்சம் கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உயிரி எரிசக்தி பிரிவு தலைமை நிதி அதிகாரி விகாஸ் ரதி தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமேசான் ரூ.58,000 கோடி முதலீடு

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் 2030ம் ஆண்டுக்குள்

கிட்டத்தட்ட 58,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அமெரிக்காவை சேர்ந்த

அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனது துாய்மையான மின்சார

பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை மேற்கொள்ள

உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கூடுதல் முதலீட்டின்

வாயிலாக , கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை அதிக அளவில்

கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் தனது நிலையை வலுப்படுத்த உள்ளது.

பொதுத்துறை தேர்வு குழு தலைவர் மல்லிகா சீனிவாசன் பதவி நீட்டிப்பு

பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வுக் குழு தலைவராக

மல்லிகா சீனிவாசனுக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு

வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தொடர்ந்து மூன்றாவது முறையாக

அவருக்கு நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி,

2026 நவம்பர் 19ம் தேதி முதல் 2027 நவம்பர் 18ம் தேதி வரை அல்லது

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர் இப்பதவியில் நீடிப்பார்.

Image 1646812



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us