வாகன மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியத்தை உயர்த்த பரிசீலனை
வாகன மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியத்தை உயர்த்த பரிசீலனை
ADDED : ஆக 09, 2025 10:57 PM

புதுடில்லி:வாகனங்களுக்கான முன்றாம் நபர் காப்பீடு பிரீமியத்தை அதிகரிக்க, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் படி, மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது கட்டாயம். விபத்து நேரிட்டால், குறிப்பிட்ட வாகனத்தால் பிறருக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதே இதன் நோக்கம்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் பிரீமியம் உயர்த்தப்படாத நிலையில், நடப்பு நிதியாண்டில், மொத்த வாகன காப்பீடு பிரீமியத்தில் 60 சதவீதமாகவும், அனைத்து பொது காப்பீடு பிரீமியத்தில் 19 சதவீதமாகவும் உள்ளன.
மேலும், மூன்றாம் தரப்பு காப்பீடு பிரிவில், நஷ்ட விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நஷ்ட விகிதம், கடந்த 2024--25ம் நிதியாண்டில் 108 சதவீதமாக இருந்தது. இதன் காரணமாக, அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதல் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
தனியார் துறை காப்பீடு நிறுவனங்களான ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பார்டு மற்றும் கோ-டிஜிட் நஷ்ட விகிதம் முறையே 64.2 சத வீதம் மற்றும் 69 சதவீதமாக உள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், மூன்றாம் தரப்பு காப்பீடுக்கான பிரீமியத்தை உயர்த்தினால்,, காப்பீடு நிறுவனங்களின் லாபத்தை அது அதிகரிக்கும்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் குறிப்பாக, மிகப்பெரிய வாகன உரிமையாளர்களுக்கு காப்பீடு செலவு கணிசமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வாகன சேதம், ஓட்டுனர் காப்பீடு என்ற இரண்டைத் தவிர, விபத்தில் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கான இழப்பீடு மூன்றாம் நபர் காப்பீடு தற்போது புதிய வாகனம் வாங்கும்போது மூன்றாம் நபர் காப்பீடுக்கு, 5 ஆண்டுகளுக்கு சேர்த்து பிரீமியம் பெறப்படுகிறது