என்.சி.டி.இ.எக்ஸ்., பங்கு வணிகம் ெசய்ய செபி ஒப்புதல்
என்.சி.டி.இ.எக்ஸ்., பங்கு வணிகம் ெசய்ய செபி ஒப்புதல்
ADDED : ஆக 09, 2025 11:02 PM

மும்பை:பங்குச் சந்தை வணிகத்தில் நுழைவதற்கு, என்.சி.டி.இ.எக்ஸ்., எனும் தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ் சந்தைக்கு, நிபந்தனைகளுடன் முதல்கட்ட ஒப்புதலை செபி அளித்துள்ளது.
இந்தியாவில் கோதுமை, பருத்தி, சோயாபீன், மிளகாய், பருப்பு வகைகள் உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் வர்த்தக தளமாக செயல்பட்டு வரும் என்.சி.டி.இ.எக்ஸ், பங்குச்சந்தை வணிகத்தில் நுழைய விண்ணப்பித்து இருந்தது.
இதனை பரிசீலித்த செபி, பங்கு வணிகத்தில் இறங்கும் முன்னர், வேளாண் பொருட்களை பங்குகளாக மாற்றும் அளவுக்கு வலிமைப் படுத்துவதோடு, தொழில்நுட்பம், செயல்பாடுகள் மற்றும் இடர் ஆகியவற்றில், என்.சி.டி.இ.எக்ஸ்., போதிய அளவு முதலீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றது.
மேலும், ஒப்பந்தம் சார்ந்த வணிகத்தில் நுழையும் முன்னர், முதலில் வலுவான, நிலையான ரொக்கம் சார்ந்த பங்கு வர்த்தகத்தை உருவாக்குமாறு, செபி அறிவுறுத்தி உள்ளது. இறுதிக்கட்ட ஒப்புதல் என்பது செபியின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை பொறுத்து வழங்கப்பட உள்ளது.