பெங்களூரில் டிச., 9 - 13 வரை கட்டுமான இயந்திர கண்காட்சி
பெங்களூரில் டிச., 9 - 13 வரை கட்டுமான இயந்திர கண்காட்சி
ADDED : டிச 04, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு வரும் 9 முதல் 13ம் தேதி வரை, பெங்களூருவில் கட்டுமான இயந்திர கண்காட்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
'எக்ஸ்கான் 2025' என்ற இந்த கண்காட்சி, கட்டுமான இயந்திரம் மற்றும் அதி நவீன தயாரிப்புகளில் நம் நாட்டின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பெங்களூருவைச் சேர்ந்த மதர் இந்தியா பார்மிங் நிறுவனம் அடுத்த தலைமுறை உதிரிபாகங்கள் மற்றும் உபகரண வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

