UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 10:32 PM

கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சில்லரை வாகன விற்பனை 31.72 லட்சமாக பதிவாகியுள்ளது. இது, கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது 23.80 சதவீதம் குறைவாகும். இருப்பினும், இது வாகன தேவையில் ஏற்பட்ட சரிவு அல்ல என வாகன முகவர்கள் சங்க கூட்டமைப்பான ‘படா’ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய இரு பண்டிகைகளும் அக்டோபர் மாதத்திலேயே வந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி நவம்பர் மாதத்துக்கு தள்ளிப்போனதே விற்பனை குறைய காரணம் என படா தெரிவித்துள்ளது.
மின் வாகன விற்பனை அதிகரிப்பு
அக்டோபரில் மின்சார வாகனங்களின் விற்பனை வரலாறு காணாத வகையில் 3.55 லட்சமாக அதிகரித்துள்ளது. மொத்த வாகன விற்பனையில் இவற்றின் பங்கு 6 சதவீதத்திலிருந்து 11.50 சதவீதமாக உயர்ந்துள்ளது
தீபாவளி பண்டிகை நவம்பருக்கு நகர்ந்ததால், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இருசக்கர வாகன விற்பனை கூடுதல் சரிவு கண்டுள்ளது.
