வர்த்தக விளக்கம்:ஐ.இ.சி., பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டுமா?
வர்த்தக விளக்கம்:ஐ.இ.சி., பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டுமா?
UPDATED : நவ 10, 2026 04:27 PM
ADDED : நவ 10, 2026 10:37 AM

கேள்வி: ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர், ஐ.இ.சி., பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டுமா?
பதில்: ஆம். ஏற்கனவே ஐ.இ.சி., எண் வைத்திருப்பவர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்களது நிறுவன விவரங்களை இணையத்தில் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
நிறுவனத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களில் மாற்றம் இல்லாவிட்டாலும், 'மாற்றம் இல்லை' என உறுதி செய்வது கட்டாயம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐ.இ.சி., எண் வாங்க வேண்டியதில்லை.
புதுப்பிக்காவிட்டால் என்ன ஆகும்?
ஐ.இ.சி., எண் செயலிழக்கச் செய்யப்படலாம். தேவையான விவரங்களை புதுப்பித்ததும் மீண்டும் செயல்படுத்த முடியும். எனவே, ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களை உறுதி செய்வது அவசியம்.
இணையதளம்: www.dgft.gov.in
கவனிக்க வேண்டியது
விபரம் : விதி
புதுப்பிக்கும் காலம் : ஏப்ரல் - ஜூன்
குறிப்பிட்ட காலத்தில் : கட்டணம் இல்லை
காலக்கெடுவுக்கு பின் : ரூ.200 கட்டணம்
