ADDED : பிப் 13, 2024 05:08 AM

நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்து 15.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது முழு நிதியாண்டுக்கான திருத்தப் பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில், 80 சதவீதமாகும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
நேரடி வரி வசூல்களின் புள்ளி விபரங்களின் படி, வரி வருவாய் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இம்மாதம் 10ம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல், 18.38 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இது கடந்த ஆண்டு வசூலான மொத்த வருவாயை விட, 17.30 சதவீதம் அதிகமாகும். மேலும், நேரடி வரி வசூலில் திருப்பி அளித்தல் போக நிகர வருவாயாக, 15.60 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும், 20.25 சதவீதம் அதிகமாகும். இது நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில், 80.23 சதவீதமாகும்.