ADDED : ஜன 19, 2025 12:17 AM

சென்னை:'டாபர்' நிறுவனம், தமிழகத்தில் அமைக்க உள்ள உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் கொள்ளார் என்ற கிராமத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில், டாபர் அதன் உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது.
இதற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற, இந்நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 11ம் தேதி அனுமதி கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலையில், கிட்டத்தட்ட 250 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு தேன், பற்பசை, பழச்சாறுகள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தென் மாநிலங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
முன்னதாக, தமிழக அரசுக்கும் டாபர் நிறுவனத்துக்கும் இடையே இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு ஆகஸ்டில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. இதன்படி முதற்கட்டமாக ஆலை அமைக்க 135 கோடி ரூபாயும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 400 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது.