ஏற்றுமதி காப்பீடு சிறு ஏற்றுமதியாளர்களுக்கு 95% வரை பாதுகாப்பு
ஏற்றுமதி காப்பீடு சிறு ஏற்றுமதியாளர்களுக்கு 95% வரை பாதுகாப்பு
UPDATED : நவ 09, 2026 05:23 PM
ADDED : நவ 09, 2026 03:58 PM

வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்த பிறகு, வாங்கிய நிறுவனம் பணம் தராவிட்டால் இழப்பு ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகளை சமாளிக்க, மத்திய அரசின் இ.சி.ஜி.சி., நிறுவனம் 'சிறு ஏற்றுமதியாளர் பாலிசி' வழங்குகிறது.
யார் பயன்பெறலாம்?
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மிகாமல் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய எதிர்பார்க்கும் நிறுவனங்கள்.
என்ன பாதுகாப்பு?
வெளிநாட்டு வாடிக்கையாளர் பணம் செலுத்தத் தவறுவது போன்ற வர்த்தக அபாயங்களுக்கு, தகுதியான இழப்பில் 95 சதவீதம் வரை காப்பீடு கிடைக்கும்.
போர், வெளிநாட்டு அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பணம் கிடைக்காதது போன்ற அரசியல் அபாயங்களுக்கு 100 சதவீதம் வரை பாதுகாப்பு வழங்கப்படும்.
பாலிசி விபரம்
காலம்: 12 மாதங்கள்.
குறைந்தபட்ச பிரீமியம்: ரூ.5,000.
அதிகபட்ச காப்பீட்டுப் பொறுப்பு: ரூ.2 கோடி.
கவனத்திற்கு: எல்லா இழப்புகளுக்கும் காப்பீடு கிடைக்காது. வெளிநாட்டு வாடிக்கையாளருக்கான கடன் வரம்பை இ.சி.ஜி.சி.,யிடம் ஒப்புதல் பெற வேண்டும். பாலிசி நிபந்தனைகளின்படி இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு: main.ecgc.in
