3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி
3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி
UPDATED : ஜூலை 21, 2025 07:25 AM
ADDED : ஜூலை 21, 2025 12:53 AM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் முக்கிய மூன்று துறைகளான மின்னணு, ஆயத்த ஆடைகள் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, ஆயத்த ஆடை ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 32,725 கோடி ரூபாயைக்காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 35,615 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியும் முதல் காலாண்டில் 19.45 சதவீதம் அதிகரித்து, 16,575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த மூன்று துறைகளிலும் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாக அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நாடாக உள்ளதை பிரதிபலிப்பதாக உள்ளது.