ADDED : மே 01, 2025 11:54 PM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 825 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 70.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 15ம் தேதி வெளியிடப்பட்ட முதற்கட்ட மதிப்பீட்டில், ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 69.78 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 70.12 லட்சம் கோடி ரூபாய் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்த 2023 - 24ம் நிதியாண்டின் 66.14 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.
சேவைகள் துறை ஏற்றுமதி கணிசமாக அதிகரித்ததே, ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த நிதியாண்டில் சேவைகள் துறை ஏற்றுமதி 13.60 சதவீதம் வளர்ச்சியடைந்து, 32.94 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.