போர் விமான முன்மாதிரி அதானி- எம்.டி.ஏ.ஆர்., கூட்டு
போர் விமான முன்மாதிரி அதானி- எம்.டி.ஏ.ஆர்., கூட்டு
ADDED : அக் 13, 2025 11:13 PM

புதுடில்லி :இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் முன் மாதிரியை உருவாக்க அதானி டிபன்ஸ் மற்றும் எம்.டி.ஏ.ஆர்., டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் 15,000 கோடி ரூபாயில் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன.
எம்.டி.ஏ.ஆர்., நிறுவனம், பசுமை மற்றும் அணு ஆற்றல், விண்வெளி மற்றும் ராணுவ துறைக்கான உபகரணங்கள் மற்றும் முக்கிய அமைப்புகளை உற்பத்தி செய்கிறது. சந்திராயன், மங்கள்யான் மற்றும் அக்னி ஏவுகணை உற்பத்தியில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும், விண்வெளி மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிலையில், இந்த போர் விமானத்தின் முன்மாதிரியை உற்பத்தி செய்ய, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
இந்த விமானத்தின் முன் மாதிரியை உருவாக்க, அதானி - எம்.டி.ஏ.ஆர்., நிறுவனங்கள் உட்பட மொத்தம் ஏழு நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.
போர் விமான முன்மாதிரியின் முதல் சோதனை 2028 - 2029ம் நிதியாண்டில் நடைபெறும் போர் விமான உற்பத்தி 2035ல் துவங்கும்; மொத்தம் 140 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை படையில் சேர்க்க திட்டம்
ஏலத்தில் பங்கேற்ற இதர நிறுவன விபரங்கள் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பாரத் போர்ஜ் - பி.இ.எம்.எல்., - டேட்டா பேட்டன்ஸ் எல் அண்டு டி - பாரத் எலக்ட்ரானிக்ஸ் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் - ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ்