கடன் செயலிகளை கட்டுப்படுத்த நிதியமைச்சர் வலியுறுத்தல்
கடன் செயலிகளை கட்டுப்படுத்த நிதியமைச்சர் வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நிதித் துறை கட்டுப்பாட்டாளர்கள், ஆன்லைன் செயலிகள் வாயிலாக அங்கீகரிக்கப்படாத கடன் வழங்குவதைத் தடுக்க, கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 28வது கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர், கட்டுப்பாட்டாளர்கள், உள்நாடு மற்றும் உலகளாவிய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலையான விழிப்புணர்வோடு இருக்கவும், வளர்ந்து வரும் நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களைக் கண்டறிவதில் முனைப்புடன் செயல்படவும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், உள்நாடு நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும் பிரச்னைகள், கவுன்சிலின் முடிவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.