ஜென்சால் நிறுவனர்கள் விலகல்; செபி நடவடிக்கையால் முடிவு
ஜென்சால் நிறுவனர்கள் விலகல்; செபி நடவடிக்கையால் முடிவு
ADDED : மே 13, 2025 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியை சொந்த சுகபோகங்களுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனர்கள், தங்களது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பங்கு சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜென்சால் நிறுவனர்கள் அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனீத் சிங் ஜக்கி இருவரும், இயக்குநர் பொறுப்பு வகிப்பதற்கு தடை விதித்து, செபி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
அன்மோல் சிங் நிர்வாக இயக்குநராகவும்; புனீத் சிங் முழு நேர இயக்குநராகவும் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர்கள் விலகியுள்ளதாக ஜென்சால் நிறுவனம் தெரிவித்துள்ளது.