சீன பாலியஸ்டர் இறக்குமதி தடுப்பதற்கு அரசு நடவடிக்கை
சீன பாலியஸ்டர் இறக்குமதி தடுப்பதற்கு அரசு நடவடிக்கை
ADDED : நவ 22, 2025 11:50 PM

புதுடில்லி: சீனாவிலிருந்து, மலிவு விலையில் பாலியஸ்டர் நுால் இறக்குமதி செய்து குவிப்பதற்கு எதிராக வரிவிதிக்க விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
பாலியஸ்டர் நுால், மிக மலிவான விலையில் சீன நிறுவனங்களால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் விளைவாக உள்நாட்டு பாலியஸ்டர் உற்பத்தி பாதிக்கப்படுவதாக ரிலையன்ஸ், வெல்நோன் பாலியஸ்டர் ஆகிய நிறுவனங்கள், வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தில் புகார் அளித்தன.
மலிவு விலை இறக்குமதி பாலியஸ்டருக்கு எதிராக, இறக்குமதி பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கு மாறு அவை கோரியுள்ளன. இதனையடுத்து அந்த இயக்குநரகம் விசாரணையில் இறங்கியுள்ளது.
புகாரில் கூறியபடி, இந்த இறக்குமதியால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவது தெரியவந்தால் மேற்கண்ட வரி விதிக்க பரிந்துரைக்கப்படும்.
இதில் இறுதி முடிவை நிதியமைச்சகம் எடுக்கும். இந்தியா ஏற்கனவே சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறுபட்ட பொருட்களின் குவிப்புக்கு எதிராக பொருட்குவிப்பு வரி விதித்துள்ளது.

