ADDED : நவ 22, 2025 11:55 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின், வரிவிதிப்புக்கு முந்தைய லாபம் 50 சதவீதத்தை தாண்டும் என கடன் மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் ரேட்டிங்ஸ் கணித்து ள்ளது.
மேலும் அது தெரிவித்துள்ளதாவது:
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய் வதுடன், பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருட்கள் சந்தைப்படுத்தல் வாயிலாக வருமானம் ஈட்டுகின்றன. பசுமை எரிசக்தியை நோக்கி, உலக நாடுகள் கவனம் செலுத்தி வருவதால், உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை மெதுவான வளர்ச்சி கண்டு வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய் விலை சாதகமாக இருப்பது, இந்தியாவில் எரிபொருட்களுக்கான நிலையான சில்லரை விற்பனை விலை ஆகியவற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பேரல் ஒன்றுக்கு 1,584 - 1,760 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

